தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவதை தவெக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார். மறைவாக குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுவரை 70 குழந்தை தொழிலாளர்களும், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 150 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.