தமிழகத்தில், குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் இலவசமாகப் பெறலாம். பெயர் இல்லாமல் சான்றிதழ் பெற்றிருந்தால், அடுத்த 12 மாதங்களுக்குள் பெற்றோர்கள் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். 01.01.2000க்கு முன்னரும் பின்னரும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 26, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.