ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வருகிற டிச.10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் Meta நிறுவனம், டிச.4 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய பயனர்கள் FB, இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், 16 வயதானால் மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.