குழந்தைகளின் வெற்றியை கண்டு மகிழ்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (நவ., 14) குழந்தைகள் தினத்தையொட்டி அவரது வாழ்த்து செய்தியில், 'உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.