பள்ளிக்கு செல்லும் நாட்களிலும் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 50% குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக 'ஜாமா பீடியாட்ரிக்ஸ்' நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேம்களில் மூழ்கி குழந்தைகள் தங்களது தூக்கத்தை இழப்பது அவர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் நள்ளிரவு நேர மொபைல் பயன்பாட்டை கண்காணித்து நல்வழிப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.