சீனா தனது காலாவதியான சுமார் 200 ஷென்யாங் ஜே-6 ரக போர் விமானங்களை, தாக்குதல் டிரோன்களாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நீரிணைக்கு அருகே ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஐந்து விமானத் தளங்களிலும், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு விமானத் தளத்திலும் இந்த டிரோன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மின்செல் விண்வெளி கல்வி மையம் நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளன.