சீனாவில், கழிவு நீர் எடுத்து செல்லும் ட்ரக்கை தனது திருமணத்தின் ஊர்வலத்திற்கு, பான் என்ற இளைஞர் பயன்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவரின் காதலியும் சம்மதம் தெரிவித்துள்ளார். பானின் பெற்றோர் இந்த தொழிலை செய்து வந்த நிலையில், தற்போது அவரும் இந்த தொழில் ஈடுபட்டுள்ளார். ’இது ஒரு உணர்வுபூர்வமான செயல்’ என தெரிவித்துள்ள அவர், தனது வேலை அழுக்கு, துர்நாற்றம் நிறைந்ததாக இருந்தாலும், அதை நேர்மையுடன் செய்வதால் பெருமையாக உள்ளதாக கூறியுள்ளார்.