உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதால், முன்னணி குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனமான TSMC தனது மேம்பட்ட '3nm' சிப்களின் விலையை 15% வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விலை உயர்வு காரணமாக, வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளின் (GPU) விற்பனை விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.