பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பை பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடான இதில், சோழர்களின் பரம்பரை மற்றும் வரலாற்று வெற்றிகள் குறித்த முக்கிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 300 ஆண்டுகளாக நெதர்லாந்தில் இருந்த இந்த அரிய வரலாற்று ஆவணம் தற்போது தாயகம் திரும்பியுள்ளது தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:News18