டாஸ்மாக் பணியாளர்களைப் போல மது அருந்துவோருக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், தினமும் மது அருந்துவோருக்குப் பழுப்பு நிறம், கிளப் மற்றும் பார்களில் அருந்துவோருக்குப் பச்சை நிறம், எப்போதாவது அருந்துவோருக்கு இளஞ்சிவப்பு நிறம் எனப் பிரித்து சீருடை வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.