அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் நிரந்தர நகரங்களை உருவாக்கவும், 5 ஆண்டுகளில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். விண்வெளி பயணத்தை சாதாரண மக்களுக்கும் சாத்தியமாக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோரை விண்வெளிக்கு அழைத்து செல்வதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.