தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே விதித்த 48 மணி நேரக் கெடு முடிவடைந்தது. அவர்
பதவி விலகாததால், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 முதல் மும்பையில் தொடங்கி நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என CJP அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் இப்போராட்டம் நடத்தப்படுவதாக அக்கட்சி 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.