சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்
காங்கிரஸ் கட்சியினரின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறி, பின்னர் கைகலப்பாக வெடித்தது. திடீரென ஏற்பட்ட இந்த மோதலால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: நியூஸ்18