சென்னை பாரிமுனையில்
திமுக - தவெக-வினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிமுனை பகுதியில் தவெக துண்டு அணிந்த நபர்கள், பொதுமக்களிடம் சர்வே எடுத்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த
திமுக-வினர், ‘சர்வே எடுக்க காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்’ என தவெக-வினரிடம் கூறியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: நியூஸ்18