மதுரை மாவட்டத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்கறிஞர்களை கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.