கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி விடுமுறையை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கரீம் தனது நண்பர்கள் 2 பேருடன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 2 பேரை மீட்ட நிலையில் கரீம் நீரில் மூழ்கியுள்ளார். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கரீமை சடலமாக மீட்டனர்.