12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல் நாளில் 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்

13பார்த்தது
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல் நாளில் 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்
தமிழகத்தில் இன்று (மார்ச்.2) தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சுமார் 10,000 மாணவர்கள் மொழிப்பாட தேர்வை எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதில் 8,319 பள்ளி மாணவர்களும், 1,600-க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் அடங்குவர். மாநிலம் முழுவதும் எவ்வித ஒழுங்கீன செயல்களுமின்றி தேர்வுகள் சுமூகமாக நடைபெற்ற நிலையில், மாணவர்கள் வராததற்கான காரணங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி