நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பிறந்தநாள் இன்று (ஆக.24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சார்பில், இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, கோயில் பிரசாதங்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளையும் மரியாதையையும் அவர் தெரிவித்து கொண்டார்.