லண்டன் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற 'லெ மான்ஸ்' கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரை, தமிழக முதல்வர்
விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அஜித்தை நோக்கி
விஜய் ஓடிவந்து கட்டித்தழுவி வரவேற்ற காட்சிகள் மற்றும் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த நிகழ்வு தொடர்பான காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவ நட்சத்திரங்களும் ஒரே மேடையில் நட்புடன் இணைந்த இக்காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.