எண்ணெய் நிறுவனங்கள் சி.என்.ஜி. (CNG) எரிவாயு விலையைக் கிலோவுக்கு மேலும் ரூ.2 உயர்த்தியுள்ளன. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் மட்டும் சி.என்.ஜி. விலை ரூ.6 வரை உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்தில் 4-ஆவது முறையாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்தத் தொடர் விலை உயர்வால் ஆட்டோ, கார் மற்றும் வணிக வாகன ஓட்டிகள் பெரும் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.