துாத்துக்குடி தொகுதி தவெக எம்எல்ஏவும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், 'ஜெயிச்சா தொகுதியிலேயே தங்குவேன்' என்ற வாக்குறுதியை மீறி, வாரம் ஒருமுறை மட்டுமே வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளுக்காக அமைச்சரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், உதவியாளர்களிடம் சரியான பதில் இல்லை என்றும், இந்த விஷயத்தில் முதலமைச்சர்
விஜய் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.