தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அதனை முறைப்படுத்துவதற்காகவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேவல் சண்டைக்கு தடை இல்லாததால், விழா அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் போலீசாரை அணுகி அனுமதி பெற்று கொள்ளலாம் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.