
திருவாரூர் வாகன விபத்தில் 2 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இன்று மாலையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், கிருஷ்ணா (36), விஷ்ணு (25) இருவர் உயிரிழந்தனர். இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





























