சபரிமலை யாத்திரையில் கோவை பக்தர் உள்பட 9 பேர் மரணம்

4577பார்த்தது
சபரிமலை யாத்திரையில் கோவை பக்தர் உள்பட 9 பேர் மரணம்
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 10 நாட்களில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே, சபரிமலை யாத்திரை மேற்கொண்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முரளி (50) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி