கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த மெட்ரோ திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திட்டத்தை செயல்படுத்த தேவையான அறிவுரையை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இத்திட்டத்துக்கு நிலம் கிடைப்பது ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.