கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு இல்லை: CMRL தகவல்

2பார்த்தது
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு இல்லை: CMRL தகவல்
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) விளக்கமளித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் குறித்துத் தமிழக அரசிடம் கூடுதல் ஆவணங்களுடன் விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், தமிழக அரசு விரைவில் மீண்டும் விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.