கோவை அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை போலீசார் துடியலூர் அருகே சுட்டுப் பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்கள் காலில் குண்டு அடிபட்டது. காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.