இளம்பெண் கடத்தல்.. முதலமைச்சரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்

5606பார்த்தது
இளம்பெண் கடத்தல்.. முதலமைச்சரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்
கோவையில் இளம்பெண் நேற்று (நவ.6) கடத்தப்பட்ட சம்பவத்திற்கு, திமுக அரசு மற்றும் காவல்துறை தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (நவ,7) வெளியிட்ட பதிவில், “பெண் கடத்தல் குறித்து புகார்கள் வரவில்லை என காவல்துறை பொறுப்பற்று கூறியுள்ளது. கோவை மற்றும் வாளையார் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான தொடர் குற்றங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த குற்றங்களைத் தடுக்க கவனம் செலுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி