கோவையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு ரூட்ஸ் குழுமம் மற்றும் கோயம்புத்தூர் சர்க்கிள் சார்பில் நேற்று விழா நடைபெற்றது. கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூட்ஸ் குழும இயக்குநர் டாக்டர் கவிதாசன் தலைமை தாங்கினார். மாநகர காவல் ஆணையாளர் முனைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு நிறுவனங்களின் மனிதவளத் துறை அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிப்பதில் மனிதவளத் துறையின் பங்கு முக்கியமானது என அவர் தனது உரையில் தெரிவித்தார்.