கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஜே.பி. மருத்துவமனையில் இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜே.பி. மருத்துவமனை உரிமையாளர் பிரபாகரன், சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், மீனாகுமாரி ஆகியோர் கொடியசைத்து இந்தப் பேரணியைத் துவக்கி வைத்தனர். இதில் சேரன் கல்லூரி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி பேரணியாகச் சென்றனர்.