கோவை: ரயில் நிலையம் அருகே 2.100 கிலோ கஞ்சா பறிமுதல்

644பார்த்தது
கோவை: ரயில் நிலையம் அருகே 2.100 கிலோ கஞ்சா பறிமுதல்
மகா சிவராத்திரி விழாவையொட்டி மாநகர போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, 2.100 கிலோ கஞ்சாவுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். ரேஸ் கோர்ஸ் போலீசார் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நிதிஷ்குமார் போலீசாரைக் கண்டு தப்பிக்க முயன்றார். அவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்த பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நிதிஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி