கோவை சித்தநாயக்கன்பாளையம் குட்டை அருகே கேரள மாநிலத்திலிருந்து உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று ஏற்படுத்தக்கூடிய கோழி கழிவுகளை நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியதாக அன்வர் சவாதிக் (19) மற்றும் சுபைர் (38) ஆகிய இருவர் மீது சுல்தான்பேட்டை காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.