கோவையில் இன்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆர். எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த அபிமன்யூ (வயது 69) என்பவர் பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதேபோல், நெல்லையைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 20) ஆர். எஸ். புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், வேலூர் காட்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 22) தனது நண்பர் ஸ்ரீதருடன் மோட்டார் சைக்கிளில் சின்னவேடம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.