கோவை: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

73பார்த்தது
கோவை: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கோவை சிங்காநல்லூரில் நேற்று ஆர். வி. எல். காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், அங்குள்ள ஒரு காலி இடத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுரேஷ்குமார் (22), நவநீதன் (27), நிவாஸ் (19), செல்வகுமார் (29), மற்றும் சதீஷ்குமார் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் அவர்களை கைது செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி