கோவை மாவட்டம் தடாகம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவகுமாரிடம் 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வீடு மற்றும் நிலம் விற்பனை தொடர்பாக அழைத்துச் சென்ற பேபி @ மாயா, மோகனகிருஷ்ணன், கண்ணதாசன் ஆகியோர் திட்டமிட்டு நகை மற்றும் கைப்பேசியை பறித்து தப்பியதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மூவரையும் கைது செய்து, பறிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் நேற்று அடைக்கப்பட்டனர்.