கோவை சரவணம்பட்டி அருகே மணியக்காரன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக நேற்று சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்த பிரதீப் (26), வியாஸ் (20), விமல்ராஜ் (38), கார்த்திக் (25), சண்முகசுந்தரம் (30), பொன்ராஜ் (40) அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ஆல்வின் (33) மற்றும் கணபதியைச் சேர்ந்த விஜய் (31) உட்பட 9 பேர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 9 பேரையும் கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.