கோவை கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று (மே 14) 5 அடி நீளச் சாரைப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயுதம் ஃபவுண்டேஷன் விலங்குகள் மீட்புக் குழுவினர் சோபாவுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். பருவநிலை மாற்றத்தால் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.