கோவை சிவானந்தா காலனி - ராமநாதபுரம் வழித்தடத்தில் இயங்கும் 5-ம் எண் தனியார் பேருந்தில், நேற்று (மே 27) ஓட்டுநரின் அருகே கியர் பாக்ஸ் மீது அமர்ந்து இளம்பெண் ஒருவர் டிரைவருடன் பேசிச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கும் இந்த செயல் பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சம்பவத்தை சக பெண் பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் பேருந்து நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.