கோவை: சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்

2பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வி. பி. கந்தசாமி நேற்று இரவு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளபாளையம் பகுதியில் அவர் வந்தபோது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, பெண்கள் ஆரத்தி எடுத்தனர்; தொண்டர்கள் தலைப்பாகை அணிவித்தனர். தொடர்ந்து உரையாற்றிய அவர், சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you