கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். சிலிண்டர் மற்றும் அடுப்பு வைத்து ஒப்பாரி வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக 4வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.