உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, சமூக ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் இணைந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணியை நடத்தினர். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வை துணை ஆட்சியர் ஹரிப்பிரியா மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற பந்தயவீரர் ஜி. டி. விஷ்ணு ராம், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அவசியம் என்றும் வலியுறுத்தினார். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவடைந்தது.