கோவை: கோவை விழா மக்களைக் கவர்ந்த பழங்கால கார் பேரணி

3பார்த்தது
கோவை விழாவின் ஒரு பகுதியாக, நேற்று ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சி மற்றும் பேரணி மக்களை வெகுவாகக் கவர்ந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய கால மாடல்கள் முதல் 1995 வரை தயாரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கார்கள் இதில் இடம்பெற்றன. பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், ஜீப் போன்ற பல்வேறு பழைய மாடல் கார்கள் அணிவகுத்துச் சென்றன. கோவை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பழைய கார்களுடன் பங்கேற்றனர். பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி