கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருள்சூழ்ந்த, முள்புதர்கள் நிறைந்த அப்பகுதியில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதும் வழக்கமாக உள்ளதால், குற்றச் சம்பவங்களைத் தடுக்க அப்பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி, முள்புதர்கள், மண்மேடுகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், போலீஸார், வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் இருந்த மண்மேடுகள், முள்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.