கோவை - பனாரஸ் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

0பார்த்தது
கோவை - பனாரஸ் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்காக, தென்னக ரயில்வே நிர்வாகம் கோவையில் இருந்து பனாரஸ் வரை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ரயில் எண் 06005 டிசம்பர் 3 புதன் மாலை 6 மணிக்கு கோவையில் புறப்பட்டு டிசம்பர் 5 வெள்ளி இரவு 11:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 9 செவ்வாய் இரவு 11 மணிக்கு பனாரஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 12 வெள்ளி காலை 8:30 மணிக்கு கோவை வரும். முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது.

தொடர்புடைய செய்தி