நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, பீடி வாங்க 10 ரூபாய் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில், முஜிபுர் ரகுமான் என்பவருக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூ. 5,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. 2019 ஆம் ஆண்டு மதுபோதையில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், டிஜேஸ்வரன் என்ற நண்பர் உயிரிழந்தார்.