பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற சதாசிவம் (30) மற்றும் சூளேஸ்வரன்பட்டி திமுக கவுன்சிலர் புவனேஸ்வரியின் மகன் பரத்குமார் (33) ஆகியோர் முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி உயிரிழந்தனர். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.