கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் கடந்த மே 21 அன்று இரவு, ஸ்கூட்டியில் வந்த இருவர் வீட்டின் வெளியே நின்ற பல்சர் பைக்கை திருடிச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் திருடிய பல்சர் பைக்கை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு ராயல் என்ஃபீல்ட் பைக்கில் தப்பிச் சென்றனர். விசாரணையில், அந்த ராயல் என்ஃபீல்ட் பைக்கும் திருட்டு வாகனம் என்பது தெரியவந்துள்ளது. பீளமேடு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.