கோவை: புறவழிச்சாலையில் ஊழல் குற்றச்சாட்டு- பாஜக போராட்டம்!

358பார்த்தது
கோவை மாவட்டத்தில் மைக்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை அமைக்கப்படும் மேற்கு புறவழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர். அறிவொளி நகரில் சாலையை கடந்த கல்லூரி மாணவி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேம்பாலம் அமைக்க வேண்டிய இடங்களில் அமைக்காததே விபத்துக்குக் காரணம் என அவர்கள் தெரிவித்தனர். தெற்கு மாவட்ட பாஜக சார்பில் வசந்தராஜன், சந்திரசேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, திமுக அரசை கண்டித்தனர். ஒப்பந்தப் பணிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கியவருக்கு வழங்கப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வனப்பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெற்றதாகவும் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவியின் தந்தை விஸ்வநாதன், உரிய சான்றிதழ் இல்லாத வாகனங்கள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளின் நிலைமை யாருக்கும் நேரக்கூடாது என்றும் வேதனை தெரிவித்தார். உயிரிழந்த மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இன்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி