மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (வயது 40). இவர் ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் (டிசம்பர் 27) அதிகாலை 1.30 மணியளவில் இவர் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு அருகே நின்றிருந்தார்.
அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (23), அருண் (35), காளிதாஸ் (44) ஆகியோர் மது வாங்க பணம் கேட்டனர். அதற்கு ஆஷிக், தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். ஆனால் அவர்கள் 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.