கோவை: CITU மாநில மாநாடு - பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0பார்த்தது
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சந்திரன், வரவேற்பு குழு தலைவர் பத்மநாபன், கோவை மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் வேலுசாமி ஆகியோர் பங்கேற்றனர். 1970ல் தொடங்கப்பட்ட சிஐடியு 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. வரும் 6ம் தேதி கோவையில் தொடங்கும் 16வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 750 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மாநாட்டில் தியாகிகள் ஜோதி நிகழ்ச்சி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சிஐடியு அகில இந்திய தலைவர் தபன்சன், நிர்வாகி ஹேமலதா ஆகியோர் மாநாட்டை துவக்கி வைக்கின்றனர். ஐந்தாம் தேதி வரலாற்று கண்காட்சி, பொதுக்கூட்டத்திற்கு முன் சிவப்பு சட்டை பேரணி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி